மீஞ்சூர் ஒன்றியம், மெதூர் ஊராட்சியில், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 35 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சங்கமும், வேல்ஸ் மருத்துவ மனை மற்றும் மருத்துவ கல்லூரியும் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம், மற்றும் கண் சிகிச்சை முகாம், பிசியோதெரபி முகாம்கள் நடத்தப்பட்டது.

மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் மற்றும் ஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகி ஆகியோரின் ஆலோசனையின்
பேரில், மருத்துவ முகாம் நடத்தப்பட்டது,

இந்த மருத்துவ முகாமுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நிர்வாகமும், மெதூர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பிலும் செய்யப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் தமிழரசன் செய்திருந்தார். இந்த முகாமில் மெதூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ குழுவினரிடம் மருத்துவ ஆலோசனைகளையும், பரிசோதனைகளையும், சிகிச்சைகளையும் பெற்று பலன் அடைந்தனர்.

மேலும், கண் சிகிச்சை முகாமில் இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டு அறுவை சிகிச்சைக்கு சிலர் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் மருத்துவ குழுவினர் தங்களோடு அழைத்து சென்றனர். அவர்கள் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, பரிசோதனைகள் செய்த பின்னர் அவர்களுக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்படும். அதன் பிறகு மீண்டும் பரிசோதனைக்கு பிறகு அவர்கள் வீட்டிற்கு மருத்துவமனை நிர்வாகத்தினரே அழைத்து வந்து விட்டு விடுகின்றனர்.

மேலும், மெதூரில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில், அனைவருக்கும் ரத்தப் பரிசோதனை, சர்க்கரை வியாதி பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளும் செய்யப்பட்டது.

வேல்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை துணைவேந்தர் டாக்டர் நாராயணசாமி அவர்களின் ஆலோசனை பேரில், முகாமுக்கு வந்திருந்த மருத்துவக் குழுவினர் கிராமப்புற பகுதியில் வேல்ஸ் மருத்துவமனை செய்து வரும் சேவைகள் குறித்தும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு முன்னெடுத்து வரும் இலவச சேவைகள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின், தேசிய குழு உறுப்பினர், பாலகிருஷ்ணன்,
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் மில்டன், செயலாளர் அருள், பொருளாளர் யாக்கோபு, செய்தி தொடர்பாளர் முத்து மற்றும் ஒருங்கிணைந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எழில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், மருத்துவ முகாமுக்கான உதவிகளை ஊராட்சி மன்ற அலுவலக உதவியாளர் நித்தியா மற்றும் பணியாளர்கள் செய்து கொடுத்தனர்.

இம் முகாமில், த.வெ.க கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் மற்றும் குணா உள்ளிட்ட கட்சியினரும், மெதூர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.

செய்திகள் : பழவை முத்து / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed