ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற விபத்து ஒன்றில் காட்டுப்பன்றி இறந்தது. அந்த விபத்தில், பைக்கில் வந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் கீழபொட்டல்பட்டி அருகில், ஏ ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் பிரபு (வயது41) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர், நேற்று இரவு சுமார் 11 மணியளவில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருட்டிலிருந்து திடீரென சாலையின் குறுக்கே ஓடி வந்த காட்டுப்பன்றி ஒன்று அவர் பைக்கில் மோதியது.
அந்த விபத்தில், காட்டுப்பன்றி படுகாயம் அடைந்து பலியானது. பைக் ஓட்டி வந்த வெங்கடேஷ் பிரபு என்பவரும் படுகாயம் அடைந்தார். இது பற்றி தகவல் கிடைத்தவுடன் வன்னியம்பட்டி போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்த வெங்கடேஷ் பிரபுவை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இறந்த காட்டுப்பன்றி ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக வன்னியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள் ; கண்ணன் ஸ்ரீவில்லிபுத்தூர் / 8939476777
