சிவகங்கை மாவட்டம் கரைக்குடி மாநகராட்சியில் புதிய பேருந்து நிலையத்தில் மாநில ஆதிதிராவிடர் நல விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழகூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆறு வீரசேகர் தலைமையேற்க பொதுச்செயலாளர் பெரியார் ராமு முன்னிலை வகித்தார்.

கீழ்கண்ட தீர்மானங்களை மாநிலத்தலைவர் வாசித்தார்.

1. ஆதிதிராவிடர் நலத்துறையில் ஏற்கனவே வழங்கிய இ.பட்டா வை உடனடியாக சார்பு செய்து விளிம்பு நிலை மக்களை குடியமர்த வேண்டும்.

2. அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் தற்போது அமைக்கப்படும் கண்காணிப்புக்குழு , நலக்குழு, தூய்மை பணியாளர் நலக்குழு ஆகிய உறுப்பினர்கள் நியமிக்கும் போது மாநில பதிவு பெற்ற அரசியலமைற்ற நிறுவனத்திற்கு மாவட்டத்திற்கு 3 உறுப்பினர்களுக்கு வழங்கிட அரசானையில் உள்ளதை அந்தந்த மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலகம் நிறைவேற்ற நடவடிக்க எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3. வீட்டு வேலை செய்வோர் நலச் சங்கம், தூய்மை காவலர் நலச்சங்கம், தெருவோர வியாபாரிகள் நலச்சங்கம் ஆகிய சங்கங்களை நமது அமைப்பின் கீழ் இனைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4. மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி மற்றும் அதற்கு கீழ் பணிபுரியும் ஆ. தி.ந. தனிவட்டாட்சியர்களை 3 மாதத்திற்கு ஒருவரை மாற்றம் செய்யக்கூடாது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

5. தமிழக முதலமைச்சர் அவர்கள் ஒப்பந்ததாரர்கள் பதிவை எளிமை படுத்தி ஆதிதிராவிடர்கள் அந்த ஒப்பந்தத்தில் பங்குபெற நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்ட மாவட்டங்கள் தென் சென்னை, கருர், காஞ்சிபுரம் புதுக்கோட்டை, திருச்சி, விருதுநகர் தர்மபுரி, திருப்பூர், சிவகங்கை ஆகிமாவட்டங்கள் கலந்து கொன்டனர் .

செய்திகள் ; ஆனந்த் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed