சினிமா பஞ்ச் டயலாக்லையே அரசியல் பண்ணலாம் என்று நினைக்கிறார்கள் . ஆக்கப்பூர்வமாக சிந்தித்து பேச வேண்டும். திமுக முன்னாள் எம்எல்ஏ எழிலரசனுக்கு பதில் ;

வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல்? காங்கிரஸ் சார்பாக கொடுக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் தற்போது வரை நியமம் செய்யவில்லை- கார்த்திக் சிதம்பரம் குற்றச்சாட்டு, ராஜினாமா செய்து தவெகவிற்கு வருபவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை அந்த வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும். எதற்காக ராஜினாமா செய்கிறார் என்று சிந்திக்க வேண்டும்.– சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம்

சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த சிவகங்கை எம் பி கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;-

புதிய அரசுக்கு பணியாற்ற போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் ஆட்சி அமைந்து குறுகிய காலத்திலேயே ஒவ்வொரு நடவடிக்கையையும் விமர்சிப்பது சரியான அணுகுமுறை அல்ல என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய கார்திக் சிதம்பரம் கூறியதாவது

, அரசு பதவியேற்று இன்னும் இரண்டு மாதங்கள்கூட ஆகாத நிலையில் உள்ளது என்றும், பெரும்பாலான அமைச்சர்கள் முதல் முறையாக பொறுப்பேற்றிருப்பதால் நிர்வாகத்தில் நிலைபெற அவர்களுக்கு கால அவகாசம் தேவை என்றும் கூறினார்.

முதல் பட்ஜெட்டுக்குப் பிறகே அரசின் செயல்திட்டம் குறித்து முழுமையாக மதிப்பிட முடியும் என்றார்.

கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் அதன் பயன் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும், தனியார் நிறுவனங்கள் எரிபொருள் விலையை குறைக்கத் தொடங்கியுள்ள நிலையில் அரசு நிறுவனங்களும் அதனை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்யும் நோக்கில் மக்களிடம் இருந்து உறிஞ்சி கொண்டிருக்கிறார்கள்.

ஐந்து வருடங்களுக்கு ஆட்சி கலைய போவதில்லை ஆட்சியில் இருப்பவர்கள் கவலைப்பட தேவையில்லை யாரையும் சேர்த்துக் கொள்ள வேண்டாம் யாரும் விட்டுப் போகப் போவதில்லை. வெளியே இருப்பவர்கள் ஆட்சியை கவிழ்த்த நினைத்தார்கள் என்றால் அது வெற்றியடையாது.

திமுக முன்னாள் எம்எல்ஏ எழிலரசனுக்கு தேசிய அரசியல் தெரியவில்லை ஒரு மாநிலத்தில் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம் மூன்று மாநிலங்களில் முதலமைச்சர் இருக்கிறார்கள் உங்களுக்கு எத்தனை முதலமைச்சர் இருக்கிறார்கள் என்று கேட்டால் என்ன செய்வார்.

கேரளா, கர்நாடகா, தெலுங்கானாவில் முதலமைச்சராக இருக்கிறார்கள் உங்களுக்கு எத்தனை முதலமைச்சர் இருக்கிறார்கள் யார் எந்திரிச்சு நிக்கிறா யார் ஆட்சி செய்கிறார் என்பது தெரிந்து கொள்ள வேண்டும்.

சினிமா பஞ்ச் டயலாக்லையே அரசியல் பண்ணலாம் என்று நினைக்கிறார்கள் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து பேச வேண்டும்.

நம்முடைய நீர் தேவைகளை எந்த அளவிலும் பாதிக்காத அளவிற்கு தான் இந்த நடவடிக்கையாகவும் இருக்க வேண்டும் அதற்கு தான் காவேரி மேலாண்மை இருக்கிறது. தமிழ்நாட்டில் நீர் பிரச்சனை பொருத்தவரைக்கும் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக தான் உள்ளது.

காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் பற்றி ஆளுநரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு? தமிழகத்தின் அமைச்சர்களை பற்றி எனக்கு இன்னும் பரிச்சயமாகவில்லை இனிமேல் தான் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்..

தேவையில்லாத சர்ச்சை ஆக்கபூர்வமாக பேச வேண்டும்.

கவர்னருக்கு வைகை ஆற்றை பற்றி ஆய்வு செய்வதற்கு அத்தாரிடடி கிடையாது. பாஜக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து ஆளுநர்களும் அவர்களுடைய அரசியல் சாசனத்திற்கு அதிகாரத்திற்கு மேலே தான் செயல்படுகிறார்கள் செயல்படாமல் இருக்க வேண்டும்.

ஐந்து வருடங்களுக்கு விஜய் தலைமையில் ஆட்சி நடக்கும் அவர்களும் யாரையும் சேர்க்கத் தேவையில்லை அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ள நினைத்தாலும் அதுவும் முடியாது. அடுத்த சட்டமன்றத் தேர்தல் 2031 தான் நடக்கும்.

யாராக இருந்தாலும் பழகிய பிறகு தான் அனுபவம் கிடைக்கும் பட்ஜெட் போடட்டும் அதற்கு பின்பு விமர்சனம் வைப்போம்.

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு வருகிறது குறித்த கேள்விக்கு அது போன்று தெரியவில்லை.

காங்கிரஸ் சார்பாக கொடுக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் தற்போது வரை நியமனம் செய்யவில்லை என்று தெரியும்..

அரசாங்கத்தில் இருப்பவர்கள் யாரையும் அழைத்துக் கொள்ள வேண்டாம் வெளியே இருப்பவர்கள் யாரையும் எடுத்துக் கொள்ளவும் வேண்டாம்.

அதிமுக தலைமை மீது நம்பிக்கை இல்லாமல் வந்து கொண்டிருக்கிறார்கள்.
நீண்ட நாள் நீடிக்கக் கூடிய தலைவராக தற்போது விஜய் இருக்க கூடிய சூழலில் வருகிறார்கள்.

அதிமுக கட்சி இருக்க வேண்டும், அடித்தட்டு மக்களின் உணர்வுகளை புரியக்கூடிய கட்சி கட்சி அழிவது எனக்கு சரியாகப்படவில்லை.. தமிழ்நாட்டின் ஜனநாயகத்திற்கு சரியல்ல.

என்னுடைய அட்வைஸை யாரும் கேட்பதில்லை என்னை கேட்டால் யாரையும் நீங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டாம் யாரையும் அனுப்ப வேண்டாம் பெரும்பான்மை இருக்கிறது

என்னுடைய அட்வைஸை என் கட்சியில் யாரும் கேட்கவில்லை பக்கத்து கட்சியில் இருந்தா கேட்கப் போகிறார்கள்.

கோயில் இடங்களில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு. ?

தப்பு நடந்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் யாரையும் டார்கெட் செய்யாமல் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காங்கிரஸ் புதிய தலைவர் தேர்வு குறித்து?

புதிய தலைவர்கள் வந்து ஒரு வாரம் தான் ஆகிறது வந்திருக்கிறார் வாழ்த்துக்கள். ராஜினாமா செய்து தவெகவிற்கு வருபவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை அந்த வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும். எதற்காக ராஜினாமா செய்கிறார் என்று சிந்திக்க வேண்டும்.

இருப்பவர்களை வைத்தே ஐந்து வருடம் ஆச்சி செய்ய முடியும் ஆட்சி நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என கார்திக் சிதம்பரம் கூறினார்

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed