மண்டல மேலாளர் ஷாரேயர் , ஏஜிஎஸ் மோகன்குமார் , கிமே வினோத்சங்கர் , ஒசெ பில்லத்திக் கண்ணன் முன்னிலை…

சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் கிராமத்தில் , இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி புதிய கிளையினை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குழந்தைராணி நாச்சியார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்…

வங்கி மண்டல மேலாளர் ஷாரேயர் உள்ளிட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் சிவகங்கை தமிழக வெற்றிக் கழக மேற்கு ஒன்றிய செயலாளர் மானாகுடி பில்லத்திக் கண்ணன், ஆகியோரது முன்னிலையில் எம்எல்ஏ குழந்தைராணி நாச்சியார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார்…

அப்போது கிராமப் பொதுமக்களிடம் பேசிய எம்எல்ஏ இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திரளாக இந்த வங்கிச் சேவைகளை பெறுவதற்கு அதிக எண்ணிக்கையிலான சேமிப்புக் கணக்குகளை தொடங்கிட வேண்டும் எனவும் அதிகளவில் பணப்பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படும் பகுதியான இந்த ஊரில் ஏழை எளிய விவசாயிகள் மற்றும் வங்கிக் கணக்குகள் வைத்திருப்போருக்கு வங்கிக் கடனுதவி பெற்றுக் கொள்ளவும் வசதியாக அமையும் எனவும் பேசினார்…

இந்த நிகழ்ச்சியில் கிளை மேலாளர் வினோத்சங்கர் , இடையமேலூர் அம்பலகாரர் முனியாண்டி , ஒன்றிய இணைச் செயலாளர் அசோக் , இடையமேலூர் என். சேகர் , ஒன்றியக்கழக நிர்வாகிகளான சிவலிங்கம் , தெய்வபிரபு , சேதுபதி , மகளிரணி புனிதா உள்ளிட்ட வங்கி ஊழியர்களான காரைக்குடி ஏஜிஎஸ் மோகன்குமார் , ஐஸ்வர்யா , உதவி மேலாளர் சித்தார்தன் , காசாளர் அக்ஷயா உள்ளிட்ட கிராமப் பொதுமக்கள் மற்றும் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்…

செய்திகள் ; ஆனந்த் சிவகங்கை / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed