விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் முதல் – வத்திராயிருப்பு பிரதான சாலையில் ராமச்சந்திராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை அகற்றக்கோரி அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராமச்சந்திராபுரம் பேருந்து நிறுத்தம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுபானக் கடை அமைந்திருக்கும் பகுதியில் பள்ளிக்கூடம்,கோவில்,
கல்லூரி,பேருந்து நிலையம் உள்ளது . மதுபான கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருவதாகவும் அதிகாரிகள் மதுபான கடைய அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பள்ளி மாணவர்கள் , பொதுமக்கள், மற்றும் அப்பகுதியில் அமைந்திருக்கும் கடை வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் இந்த அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் ; கண்ணன் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed