விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நேரு பவனத்தில் வைத்து விருதுநகர் மாவட்ட தலைவர் வி. ராஜ்மோகன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட தலைவர் எ. ரெங்கசாமி மற்றும் மாநில பொது குழு உறுப்பினர் பொன் சக்தி மோகன் ஆகியோர் முன்னிலையில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர் கணேஷ் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் பாமக, அதிமுக, திமுக கட்சிகளில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் பலர் இணைந்தனர். இணைந்த அனைவருக்கும் துண்டு அணிவித்து மாவட்ட தலைவர் ராஜ்மோகன் வரவேற்றார். பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை போன்றவைகள் மூலம் ஒன்றிய பாஜக அரசு மாணவர்கள் எதிர்காலத்துடன் விளையாடுவதை நிறுத்திக் கொள்ளவும், வினாத்தாள் கசிவு பிரச்சனையில் பல லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு தயாரான நிலையில் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் இந்த முறைகேடுகளுக்கு பாஜக அரசு பொறுப்பேற்று உரிய நடவடிக்கை எடுக்கவும், இது போன்ற முறைகேடுகளை தடுக்க வெளிப்படையான மற்றும் நம்பகமான தேர்வு முறையை உறுதி செய்யவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணிக் தாகூருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ளப்பட்டது. கூட்டத்தில் வட்டார நகர மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

செய்திகள் ; ராமகிருஷ்ணன் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed