விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்ல தொழில் வர்த்தக சங்கம் சார்பில் தமிழ்நாடு சமூகநலம் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா நடத்தினார்கள்.

தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் வைத்து நடைபெற்ற விழாவிற்கு தலைவர் பி.ஆர். வெங்கட் ராமராஜா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பத்மநாபன் வரவேற்று பேசினார். செயலாளர் எம்.சி. வெங்கடேஸ்வர ராஜா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

விழாவில், சென்னை மாகாண முன்னாள் முதல்வரும், முன்னாள் ஒரிசா மாநில கவர்னர்மான பி எஸ் குமாரசாமி ராஜா திருவுருவப்படத்தை சட்டசபையில் வைக்க ஏற்பாடு செய்யவும், ராஜபாளையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டிபி மில்ஸ் சாலை மற்றும் அழகை நகர் சாலையை இணைக்கும் ரயில்வே சுரங்க பாதையை மீண்டும் துவக்கி செயல்படுத்த கோரியும்,

ராஜபாளையம் நகராட்சியில் விதிக்கப்பட்டுள்ள கூடுதலான வீட்டு வரி உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க கோரியும், அமிர்த திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளில் கழிவு நீர் ஆறுகால் குடிநீர் மின்விளக்கு போன்றவை முறையாக செயல்படுத்த கோரியும் கோரிக்கை மனு அமைச்சரிடம் வழங்கப்பட்டது.

முடிவில், செயலாளர் ஆடிட்டர் நாராயணசாமி நன்றி கூறினார். தொழிலதிபர்கள் வர்த்தக பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்திகள் ; ராமகிருஷ்ணன் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed