ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் , ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. 
   
கூட்டத்தில் , மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கர நாராயணன் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 591 மனுக்கள் பெற்று, மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து, தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் , வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்."ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் " என்றும் , " தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்களிடம் அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும் " என்றும் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கர நாராயணன் அலுவலர்களை அறிவுறுத்தினார். 
  

மேலும், “பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும் ” என மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கர நாராயணன் தெரிவித்தார்.
கூட்டத்தில், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் செ.ஹபிபூர் ரஹ்மான் , மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் , மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி , கலால் உதவி ஆணையர் கங்காதேவி , மாவட்ட ஆட்சியரின் பொது நேர்முக உதவியாளர் லோ.ஜென் கிரிஸ்பாய் , செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சாலி தளபதி , உதவி அலுவலர் விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed