கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளி ஊராட்சி ஒன்றியம், குருபரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாளகத்தில், மைலான் நிறுவன (Mylon Laboratories Ltd ) சமூக பொறுப்பு நிதியின் மூலம் ரூ. 24 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடம், பள்ளி கழிப்பறை மற்றும் கிளை அஞ்சலக கட்டிடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் அவர்கள் திறந்து வைத்தார்.

உடன் மைலான் நிறுவன பொது மேலாளர் பழனிகுமார், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சௌந்தராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், திருமதி.சாவித்திரி உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
