மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி மற்றும் பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் இன்று காலை பொதுமக்கள் திடீர் பஸ் மறியலில் ஈடுபட்டனர். கடந்த 10 நாட்களுக்கு மேலாக தங்கள் கிராமத்திற்கு அரசு பேருந்து முறையாக வருவதில்லை.

இதுகுறித்து சோழவந்தான் அரசு போக்குவரத்து கிளை மேலாளரிடம் தெரிவித்தால் பீஸ்கமிட்டி மூலமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் பேச்சுவார்த்தை முடிவு தெரிந்த பின்பு தான் முறையாக பேருந்துகளை அனுப்ப முடியும் என அதிகார தோரணையில் பேசுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு கருப்பட்டி கிராமத்தில் அரசு பேருந்து ஓட்டுநரை தவெக நிர்வாகி தாக்கியதில் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போக்குவரத்து பணியாளர்கள் பேருந்துகளை இயக்க மறுத்து சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் ஓட்டுனரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அவரை கைது செய்வோம் என உறுதி அளித்ததின் பேரில் தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்தும் கருப்பட்டி இரும்பாடி பாலகிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களுக்கு தொடர்ந்து பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் புறக்கணித்து வந்தனர்.

இந்த நிலையில், தங்கள் கிராமத்திற்கு பேருந்து வராததால் பள்ளி செல்லும் குழந்தைகள் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் ஆகையால் தனிநபர் செய்த செயலுக்காக 5க்கும் மேற்பட்ட கிராம மக்களை தண்டிப்பது எந்த விதத்தில் நியாயம் என கூறி இன்று காலை இரும்பாடி பாலகிருஷ்ணாபுரத்தில் பொதுமக்கள் திடீர் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் பள்ளி மாணவிகள் மற்றும் பணிகளுக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்து துறை நிர்வாகம் உடனடியாக கருப்பட்டி இரும்பாடி பொம்மன் பட்டி கணேசபுரம் அம்மச்சியாபுரம் பாலகிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களுக்கு பொதுமக்களின் நலன் கருதி முறையாக பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து பேருந்துகளை இயக்க மறுத்தால் 5,000க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஒன்று திரட்டி மதுரை திண்டுக்கல் நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8949476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed