கிருஷ்ணகிரி நகரம் பழைய பேட்டை ஜனார்த்தன செட்டியார் அவர்களது மனைவி திருமதி பிரேமலீலா அவர்கள் வயதின் மூப்பின் காரணமாக, இன்று (11.06.2026) வியாழக்கிழமை அதிகாலை 3.00 மணி அளவில் இயற்கை எய்தினார். பிரேமலீலா அம்மாள் அவர்கள் தன்னுடைய மரணத்திற்குப் பிறகும் தன்னுடைய கண்களை பார்வையற்றவர்களுக்கு வழங்கி, உதவ வேண்டும் என்ற நோக்கத்தின் தன்னுடைய கண்களை தானமாக வழங்க சமாதித்து ஏற்கனவே தனது கண்களை தானம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்து இருந்தார்.

அதன் அடிப்படையில், நேற்று அவர் மரணம் அடைந்ததற்கு பிறகு அவர்களுடைய கண்களை தானமாக வழங்க அவருடைய குடும்பதாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், பிரேமாலீலா அம்மாள் அவர்களுடைய கண்கள் தானமாக வழங்கப்பட்டது.
அப்போது, பிரேமலதா அம்மாள் அவர்களுடைய கணவர் ஜனார்தன செட்டியார், அவரது மகன்கள் சுகுமார், சத்தியநாராயணன், மகள்கள் ராணி, பாக்யா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ரவிசங்கர் பெங்களூர் நாராயணா நேத்ராலயா மருத்துவமனை மருத்துவக் குழுவினர், கண்தான ஏற்பாடு செய்திருந்த சமூக சேவகர் பிரபாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
