கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 12.06.2026 வெள்ளிக் கிழமை காலை 11.00 மணிக்கு மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் பி. சந்திரசேகரன் அவர்கள் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

உறுதிமொழி:

இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும் அவர்கள் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிப்பேன் எனவும் குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும் தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமாற உறுதி கூறுகிறேன்.

இந்நிகழ்வில் துணை முதல்வர் மரு.சாத்விகா, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மருத்துவர்கள் மரு.செல்வராஜ், மரு. மது, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உதவி உள்ளிருப்பு மருத்துவ அலுவலர்கள் மரு.ரோமுள் தயான் ராஜா, மரு. தினேஷ்* பேராசிரியர்கள் மரு.மாரிமுத்து, மரு.மகேஷ் ராம், மரு.பத்மலதா மரு. எம்.கவிதா ஆகியோரும் இணை பேராசிரியர்கள் மரு. வாணிஸ்ரீ , மரு கோமதி, மரு .சுதாகர் , மரு.கவிதா , மரு.அருண் திலீப் , மரு.அமுதன் அரவிந்தன் நிர்வாக அலுவலர்கள் சரவணன், சக்திவேல் இளநிலை நிர்வாக அலுவலர் க.சுமதி செவிலியர் கண்காணிப்பாளர்கள் மகாலட்சுமி, அனிதா , உள்ளிட்ட அமைச்சு பணியாளர்கள் கிரிஸ்டல் மேலாளர் பிலிப் மோன்ஸ், உள்ளிட்ட பணியாளர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் அனைவரும் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்றனர்.

செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed