கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 12.06.2026 குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் குழந்தைத் தொழிலாளர் முறை பற்றியும், அதனால் ஏற்படும் சமூக சீர்கேடுகள் பற்றியும், குழந்தைகள் கல்வி கற்க வேண்டியதன் அவசியம் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பின் அவசியம், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் விரிவாக மாணவர்களுக்கு எடுத்துக்கூறினார்.
பின்னர் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மாணவர்கள் உறுதிமொழி மேற்கொண்டனர்.

நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் சோ. சிவகுருநாதன், கோ. ஆனந்தன், பூ. ராம்குமார், ரா. ஜீவா உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.
செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
