அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து புதியதலைமுறை தொலைக்காட்சி, இன்று (28.05.06) எந்தவித முன்னறிவிப்புமின்றி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றபோது பத்திரிகையாளர்களை அவர் சந்திக்காதது விமர்சனத்திற்கு உள்ளானது. இதுகுறித்து புதியதலைமுறை தொலைகாட்சியில் இன்று (28.05.06) விரிவான செய்தி வெளியானது. இதேபோல், தவெக ஆட்சி பொறுப்பேற்றது தொடங்கி தமிழகம் முழுவதும் நடைபெற்ற கொலைகள் குறித்தும், முதமைச்சர் விஜய், வீட்டிலிருந்து தலைமைச் செயலகம் வரும் வழியில் அவருக்கு பாதுகாப்பு வழங்குவதில் காவல்துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் கடந்த இரண்டு நாட்களில் செய்தி வெளியானது.

அரசின் செயல்பாட்டை விமர்சித்து செய்தி வெளியிட்ட காரணத்திற்காக புதியதலைமுறை முடக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனை குறித்து, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் டி எஸ் ஆர் சுபாஷ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது ;

அரசு கேபிள் இணைப்பில் புதிய தலைமுறை ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ளது கண்டிக்கபட கூடிய ஒரு நிகழ்வாகும், அரசு கேபிள் நிர்வாகம் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும். அப்படி உடனடியாக சரி செய்யவில்லை என்றால், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில், தமிழகம் முழுவதுமாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என அறிக்கையில் கூறியுள்ளார்.

செய்திகள் ; லெனின் லோகேஷ் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed