திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தாலுக்கா, வரதராஜபுரம் ஊராட்சியில் டாஸ்மாக் கடை எண். 9134 வருட கணக்கில் குடியிருப்புக்கள் நிறைந்த பகுதியில் இயங்குகிறது. இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உட்பட, தமிழக முதல்வராக இருந்த முன்னாள் முதல்வர் மற்றும் இந்நாள் முதல்வர் வரை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் விரத்திகள் உள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விதை சமீபத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடிய மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி, வரதராஜபுரம் ஊராட்சியில் இயங்கி வரும் மதுபான கடையை இடம் மாற்றம் செய்ய வேண்டுமென டாஸ்மார்க் உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்துள்ளனர்.

அதில் மதிப்பிற்குரிய திருவள்ளூர் மாவட்ட கலால் துணை ஆணையர் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் பணிந்து தெரிவித்துக் கொள்வது யாதெனில் திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி வட்டம் வரதராஜபுரம் கிராமத்தில் குடியிருப்பு பகுதி அருகாமையில் மற்றும் பெண்கள் தங்கும் விடுதி அருகாமையிலும், பனிமலர் பொறியியல் கல்லூரி அருகாமையிலும் அமைந்துள்ள டாஸ்மாக் கடை எண் 91 34 அகற்றக் கோரி பொதுமக்கள் மேற்படி பல புகார்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்காததால், 2025 ம் ஆண்டு பொதுமக்கள் சாலை மறியலில் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதற்கிடையே தற்போதைய புதிய ஆட்சி அமைத்திருக்கும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடிய மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிலையிலும் மேற்படி கடை இதனால் வரை அகற்றப்படவில்லை இச் செயல் வருத்தத்துக்குரியது மட்டுமல்லாமல் முதலமைச்சரின் ஆணையே மீறிய செயல் எனக் குறிப்பிட்டு, டாஸ்மாக் உதவி ஆணையர் அவர்கள் விரைந்து கடை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

ஆகவே, வரதராஜன் தரும் பகுதியில் பொதுமக்கள் பெண்கள் மற்றும் ஆணவ மாணவிகளுக்கு இடையூறாக இயங்கி வரும் மதுபான கடையை தயவு கூர்ந்து இடமாற்றம் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

சமூக ஆர்வலர் : ந. கோதை ஜெயராமன் வரதராஜபுரம், நசரத்பேட்டை அஞ்சல், சென்னை- 600123/ 9080877197 எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed