வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுண்ணாம்பு பேட்டை பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தினத்தந்தி மற்றும் நாளிதழ்கள் முகவராக இருந்து வந்தவர் தினதந்தி ஏஜன்ட் கிருஷ்னமூர்த்தி, இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் தற்போது, அதே பகுதியில் அனைத்து பத்திரிகைகளையும் விற்பனை செய்யக்கூடிய தொழில் செய்து வருபவர் அவருடைய இளைய மகன் லோகி ( எ ) லோகு, இவர் கடந்த சில வருடங்களாக பழைய பஸ் நிலையத்தில் பங்க் கடையும், அனைத்து நாளிதழ்களையும் விற்பனை செய்தும் வந்து கொண்டிருந்தார்.
இந் நிலையில், நேற்று அவருக்கு திடீரென உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு மயங்கிய நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தும் பலனிற்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் இறுதி அஞ்சலி செலுத்து வருகின்றனர்.
மாவட்ட செய்தியாளர் : மூர்த்தி / எதிரொலி / 8939476777
