ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டிணம் ஊராட்சியில்  , தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர் வி.கே.ராஜீவ்  தூய்மைப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
 
ஆய்வின் போது , தமிழ்நாடு  சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர் வி.கே. ராஜீவ் தேவிபட்டிணம் ஊராட்சியில் உள்ள மீன் விற்பனை நிலையத்தை பார்வையிட்டு, அதிக அளவு பொதுமக்கள் வந்து செல்வதை கருத்தில் கொண்டு அருகாமையில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான வளாகத்தில் கூடுதலாக கடைகள் அமைத்து மீன் விற்பனை மேற்கொள்ள உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அலுவலர்களை அறிவுறுத்தினார்.

மேலும் , ஊராட்சி பகுதியில் குப்பைகள் சேராமல் தூய்மைப்படுத்தி பாதுகாத்திடவும் அதற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் ஒத்துழைப்பு கொடுத்து அரசாங்கத்தால் சுத்தம் செய்து, பாதுகாக்கும் பகுதிகளை பொதுமக்களாகிய நீங்களும் பாதுகாத்து பயன்படுத்திட வேண்டுமென தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர் வி.கே.ராஜீவ் கேட்டுக் கொண்டார்.

ஆய்வின் போது , ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகர் , உதவி திட்ட அலுவலர் தங்கப்பாண்டி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *