மதுரை மாநகர் கூடல் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயலெட்சுமி என்பவர் அதே பகுதியில் துணி தைக்கும் டெய்லர் கடை நடத்தி வருகிறார். அவரது டெய்லர் கடைக்கு செல்வதற்காக, வெளியூரில் இருந்து வந்திருந்த அவரது பேரன், பேத்தியை கையில் பிடித்து கொண்டு அதே பகுதியில் நடந்து சென்றார்.

அப்போது அவர் முன்பாக இரு சக்கர வாகனத்தில் ஏற்கனவே நோட்டம் விட்டு கொண்டு இருந்த இரண்டு மர்ம நபர்கள், திடீரென ஜெயலெட்சுமி கையில் பணம் வைத்திருந்த பையை பிடுங்கி வழிப்பறி செய்தனர்.

அப்போது ஜெயலெட்சுமி, தனது கைபையை இருக்கமாக பிடித்தபோது அவரும் அவரது பேரன், பேத்தியும் கீழே விழுந்து கூச்சலிட்டனர்.

இந்நிலையில் மூவரும் கீழே விழுந்தனர். கைப்பை கொள்ளையர்களின் கையில் கிடைத்தவுடன் வேகத்தில் பைக்கில் தப்பிச்சென்றனர். அப்போது எதிரே வந்திருந்த பைக் மீது மோதி மர்மநபர்கள் இருவரும் கீழே விழுந்தனர்.

பொதுமக்கள் கூடுவதை பார்த்து மர்ம நபர்களும் பையை தூக்கி எறிந்து விட்டு, இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக தப்பித்து சென்றனர்.

இதனால் செய்வதவறியாது கீழே விழுந்ததில் ஜெயலெட்சுமி உடலில் பலத்த காயத்துடன் திகைத்து போய் இருந்த நிலையில், பேரன் பேத்திகளை இருக்க பிடித்து கொண்டு, சிகிச்சைக்காக அருகே உள்ள மருத்துவமனைக்கு சென்றனர்.

இச்சம்பவம் குறித்து 100 க்கு செல்போன் மூலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். பின்னர், காவல்துறையினர் நீண்ட நேரம் கழித்து நள்ளிரவு 2 மணிக்கு ஜெயலட்சுமியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்..

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed