ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஸௌராஷ்ட்ர பிராஹ்மண மஹாஜனங்களுக்குச் சொந்தமான ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான ஈஸ்வரன் கோவிலில், ஸ்ரீ விசாலாக்ஷியம்பிகா சமேத சந்திரசேகர சுவாமிகளுக்கு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாகத் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
     
இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மாப்பிள்ளை அழைப்பு, ஊஞ்சல் சேவை ஆகியவற்றுடன் தினசரி சாமி ஊர்வலம் நடைபெற்றது . சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம்  நடைபெற்றது .
 
கோவிலின் திருக்கல்யாண மண்டபத்தில், சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க,விசாலா ஷியம்பிகா - சந்திரசேகர சுவாமிக்கு திருக்கல்யாணம் ஊஞ்சல் சேவையில் நடைபெற்றது .

திருக்கல்யாணத்தை தொடர்ந்து , பெண் பக்தர்கள் புது தாலி கயிரை மாற்றிக் கொண்டனர் . திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு பரமக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிதம்பரம் , பரமக்குடி புறநகர் பகுதியான சோமநாதபுரம், சத்தியமூர்த்தி காலனி, எமனேஸ்வரம் உள்பட சுற்றுப்புற பெண்கள், குழந்தைகள் , ஆண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மானேஜிங் டிரஸ்டி சித்து எஸ்.ஆர்.ரெங்காச்சாரி, டிரஸ்டி அண்டு டிரஷரர் நீலம் என்.ஆர்.நீலகண்டன், டிரஸ்டிகள் துர்வாசு டி.ஆர்.ரமேஷ்பாபு, குச்சேரி கே.டி. திரிதரன், கெட்டி ஜி.என்.கோவிந்தன் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed