ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் ராமநாதபுரம் மாவட்டம் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிவுற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைத்து, சீல் வைக்கும் பணி அந்தந்த சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர்கள் , மாவட்ட தேர்தல் அலுவலரும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலையில் நடைபெற்றது. 
   
அது சமயம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ், சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர், வேட்பாளர்கள் , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ. பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார், பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
    
கல்லூரி வளாகத்தை சுற்றிலும் இரவு - பகலாக 24 மணி நேரமும் கண்காணிக்கும் விதமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாமுஜெயக்குமார் :
மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed