தென் மண்டலத் தொடர் கல்வி வாரியம் (ஓசோன்) சார்பில் சமூகத்திற்கான சமூகப் பொறுப்புணர்வு கருத்தரங்கம் திங
கலையரங்கம் கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மேனாள் நீதிபதி விடியல் குகன் @ கே. கருணாநிதி, பங்கேற்றார்.

எழுத்தாளர் வை. ஜவஹர் ஆறுமுகம் எழுத்துப் பணி மற்றும் வெளிப்படையான சமூகப் பணியைப் பாராட்டி அறிவுச் சுடர் மாமணி விருதும், டெல்டா புற்றுநோய் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அறுவைசிகிச்சை நிபுணர்
எம்.எஸ். விஜய் ஆனந்த், பின்தங்கிய நோயாளிகளுக்கு மேம்பட்ட அறுவை சிகிச்சைகளை வழங்கிய பணியினை பாராட்டி‌ மருத்துவச்சுடர் விருதும் OZONE சிறப்புப் பொன்விழாவில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பத்மஸ்ரீ மராச்சி சுப்புராமன் , நரம்பியல் நிபுணர் எம்.ஏ.அலீம், கிரீன் இந்தியா கிளைசன் செரியன், சதீஷ் நாயுடு , முனைவர் நெடுஞ்செழியன், கதிரவன், சுப்ரமணியன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தென் மண்டலத் தொடர் கல்வி வாரியத் தலைவர் சேவை கே. கோவிந்தராஜ் சிறப்புரையாற்றினார். ரேவதிஜேடிஆர் நிகழ்வினை தொகுக்க நிறைவாக சேது லிங்கம் நன்றிக் கூறினார்.

விருது பெற்ற விருதாளர்களை திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத் தலைவர் இந்திரஜித், செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், எழுத்தாளர்கள் தனலட்சுமி பாஸ்கரன், கலியமூர்த்தி உட்பட பலர் பாராட்டினார்கள்.

செய்திகள் : விஜயகுமார் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed