கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு என்பது தகுதி திறமையின் அடையாளமா? ஊழலின் ஊற்றுக் கண்ணா? மாணவர் உரிமை காக்க, மாநில உரிமை காக்க, அரசியலமைப்பு சட்டத் திரிபுவாதத்தை தடுக்க இந்திய முழுமையும் நீட் நுழைவு தேர்வினை முற்றாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில்
கிருட்டினகிரியில் புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரில் 16/05/2026- சனிக்கிழமை கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முருகேசன், இல. ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி தலைவர் சீ.இராசேசன், மாவட்ட மாணவரணி தலைவர் இர.அஜய்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மேனாள் மாவட்ட செயலாளர் கா.மாணிக்கம், மாவட்ட ப.க.தலைவர் ச.கிருட்டினன், விசிக மாநில நிர்வாகிகள் மு.கிருட்டினமூர்த்தி, பொன்னுசாமி, மாவட்டப் பொருளாளர் இரகு தேவராஜ் ஆகியோர் கலந்துகொண்டு நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பேசினர்.

நிறைவாக மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன் ஆர்ப்பாட்ட கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை துணை அமைப்பாளர் ஆர்.எஸ்.கிரி, விசிக மண்டல துணைச் செயலாளர் த.தியாகு, மாவட்ட செய்தி தொடர்பாளர் வெ.மாதையன், மாவட்ட துணைச் செயலாளர் பெ.சசிக்குமார் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர விசிக நிர்வாகிகளும் தோழர்களும் திரளாக கலந்துகொண்டனர். திராவிடர் கழக நிர்வாகிகள் பெ.செல்வம், பெ.செல்வேந்திரன், த.மாது, வெ.திருமாறன், மு.வேடியப்பன், நா. சிலம்பரசன், பூ. இராசேந்திரபாபு, செ.சிவராஜ், செ.வீரபாண்டி, கா.ஞானசேரன், சி.இராசா, மு.புகழேந்தி, பிரகாஷ் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகளும் தோழர்களும் திரளாக கலந்துகொண்டு நீட் தேர்வை இந்திய முழுமையும் முற்றிலுமாக ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி மக்கள் பெரும்திரள் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர்.

நிறைவாக திராவிடர் கழக நகரச் செயலாளர் அ.கோ.இராசா நன்றி கூறினார்.

செய்திகள் : மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed