மதுரை மாவட்டம் திருமங்கலம் நான்கு வழி சாலை கப்பலூர் சிக்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் தனியார் டயர் நிறுவனத்தில் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் அப்பொழுது இரண்டு தலை கொண்ட மண்ணுளிப் பாம்பு ஊர்ந்து கொண்டு இருந்ததை கண்ட ஊழியர்கள் உடனடியாக அங்குள்ள மேலாளிடம் தகவல் தெரிவிக்கவே வினோத் என்னும் ஊழியர் அதை பத்திரமாக பிடித்து சமூக ஆர்வலர் காளமேகம் தகவல் தெரிவிக்கவே அவர் மதுரை மாவட்ட வனசரகர் வினிஷ் அவருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் அவர் உத்தரவின் பெயரில் வன பாதுகாவல வாகன ஓட்டுனர் செந்தில் பசுமலை அருகே உள்ள வந்து இரண்டு தலை கொண்ட மண்ணுளிப் பாம்பு பெற்று சென்றார் பின் அவரிடம் இதை என்ன செய்வார்கள் என்று கேட்டபோது அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விட்டுவிடு எனவும் தெரிவித்தார்.


தயவுசெய்து பாம்பை கண்டால் யாரும் அடிக்காதீர்கள் பாம்பு மட்டுமல்லாது எந்த ஒரு விலங்கினமாக இருந்தாலும் இருந்தாலும் தயவு செய்து அடிக்காதீர்கள் பாம்பு வெயிலின் தாக்கம் காரணமாக வெளியில் அதிக அளவு வரும் அதனால் உடனடியாக நீங்கள் பாம்பை அடிக்காதீர்கள் முடிந்த அளவு தண்ணீரை ஊற்றினால் அது குளிர்ச்சி பட்டவுடன் அது மறைந்து சென்று விடும் முடிந்த அளவு பாம்பை அடிக்காமல் பாம்பு பிடி வீரர்களிடம் தகவல் தெரிவித்தால் உடனடியாக வந்து பாம்பை பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப் பகுதிக்கு விட்டு விடுவார்கள் குறிப்பாக இதுபோன்ற அரிதான பாம்புகளை தயவு செய்து அடித்து கொடுக்காதீர்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்

செய்திகள் : காளமேகம் மதுரை / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed