மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிகழக வேட்பாளராக எம். வீ கருப்பையா போட்டியிட்டு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனை விட 2678 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் 2011ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பிராகஇருந்து அவை நடவடிக்கைகளில் முன் அனுபவம் பெற்றவர் என்பதால் தமிழக ஆளுநரால் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டு பதவி ஏற்றார்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின் சட்டமன்றம் தற்போது தற்காலிகமாக மறு தேதிகுறிப்பிடப் படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. அதனால் நேற்று எம். வீ. கருப்பையாசொந்த ஊரான அலங்காநல்லூர் அருகே உள்ள வாவிட மருதூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.

முன்னதாக, மாலை 5 மணிக்கு வாடிப்பட்டி காவல் நிலையம் முன்பு உள்ள கிரட் வளாக தேர்தல் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். அதன் பின் குலசேகரன்கோட்டை மீனாட்சி அம்மன் கோயில் சமயநல்லூர் அக்னி வீரபத்திர சாமிகோவிலிலும் அலங்காநல்லூர் முனியாண்டி கோவிலிலும் வாவிடமருதூர் முத்தாலம்மன் கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார்.

அப்போது கட்சி நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர் விஷால் கிருஷ்ணன் தலைமையில் ஒன்றிய செயலாளர் தமிழன் தாமு, வழக்கறிஞர்கள் தியாகராஜன் அழகேசன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா தனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து சோழவந்தான் தொகுதியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு விரைவில் முதல்வரின் ஆலோசனை பெற்று தீர்வு காணப்படும் என கூறினார் அவருடன் தமிழக வெற்றிக்கழக மாவட்ட ஒன்றிய பேரூர் கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed