வல்லூரில் 103 வயது ஸ்டீபன், மீஞ்சூரில் 102 வயது ஈஸ்வரி ஆகியோர் உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளராது வாக்களித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லூர் வாக்குச்சாவடி எண்-232-ல் 103 வயது ஸ்டீபன் வாக்களித்தார்.
1923 ஆம் ஆண்டு பிறந்த இவர் பிரிட்டிஷ் கால தேர்தல்களையும் 1950 பிறகு இந்திய தேர்தல்களையும் சந்தித்து வாக்களித்தவர்.
இந்திய தேர்தல் ஆணையம் வயதானவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க இம்முறை அஞ்சல் வாக்குப்பதிவு வசதி ஏற்படுத்திய பின்பும் தனக்கு வாக்கு சாவடியில் சென்று வாக்களிக்க வேண்டும் என அஞ்சல் வாக்கை நிராகரித்து தேர்தல் நாளான இன்று நேரில் வாக்குச்சாவடிக்கு சென்று 232 வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இதனை அங்கிருந்து வாக்காளர்கள் கண்டு ஆச்சரியத்துடன் தாங்களும் வாக்களித்தனர்.

மேலும் வாக்களித்த பிறகு தன்னை போல் அனைவரும் வாக்களிக்க வேண்டும் தனக்கு நேரில் சென்று வாக்களிப்பது மகிழ்ச்சியாக உள்ளது எனவும் அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வாக்களிக்க தவறக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
இதேபோன்று, பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் அடுத்த புதுப்பேட்டில் 102 வயது பாட்டி ஈஸ்வரி வாக்குசாவடி எண்.160-ல் நேரில் சென்று வாக்களித்தார்.
செய்திகள் : பழவை முத்து எதிரொலி / 8939476777
