பொதுமக்கள் நடைபெற உள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் தவறாமல் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, சர்வதேச உரிமைகள் கழகம் மற்றும் மனித உரிமை கழகம் சார்பில் அதன் நிர்வாகிகள் நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.சுரேஷ்கண்ணன் வழிகாட்டுதலின்படி பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சர்வதேச உரிமைகள் கழக துணைத் தலைவரும், மனித உரிமை கழக பொருளாளருமான ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சர்வதேச உரிமைகள் கழக மாநில அமைப்பு செயலாளர் கோல்டு தேவா (எ) தேவராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக குருராமலிங்கம் கலந்துகொண்டு வாக்களிப்பதவன் அவசியம் குறித்து பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாநில துணை பொதுச் செயலாளர் அய்யனார், மாநில ஒருங்கிணைப்பாளர் தேவகுமார் மற்றும் நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், மணிவண்ணன், பாரதிராஜா, மணிகண்டன், குபேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.