ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், திருஉத்திரகோசமங்கையில் பள்ளிக்கல்வித்துறை மூலம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம், காத்தனேந்தல், வெங்கலக்குறிச்சி, கீழத்தூவல் மேலக்கிடாரம் ஆகிய ஊராட்சிகளில் ரூ.511.36 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டடத்தை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், தமிழ்நாடு குறு, சிறு , நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா திறந்து வைத்தார்.
தொடர்ந்து , திருப்புல்லாணியில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் ரூ.238.69 இலட்சம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்களை திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், குதக்கோட்டை, முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம், கொழுந்துறை, முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம், உலையூர், குமாரக்குறிச்சி ஆகிய பகுதிகளிலும் , நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம், குளத்தூர், பாண்டியூர் , சீரணத்தையில் புதிய நியாய விலை கடைகள் , பொட்டகவயலில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடம் , முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம், நெடிய மாணிக்கம் ஊராட்சியில் புதிய சமையலறை கொட்டகை , விளங்குளத்தூரில் புதிய உணவு தானிய சேமிப்புக் கிடங்கு கட்டடம் , நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம், பாண்டியூரில் புதிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கக் கட்டடம் , இணை இருப்பிடக் கட்டடம் , உடையநாதபுரத்தில் நாடக மேடைக் கட்டடம் ஆகிய பகுதிகளில் கட்டடங்கள் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து , திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், வண்ணாங்குண்டுயில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் ரூ.88.22 இலட்சம் மதிப்பீட்டில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம், செமனூர், ஆதனக்குறிச்சி, கிழவனெறி, நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம், அரசனூர், பொட்டகவயல், ஆகிய ஊராட்சிகளில் புதிய அங்கன்வாடி மைய கட்டடங்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் , வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷீநிகம், செய்தி -- மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி.சாலி தளபதி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் .
