ராமநாதபுரம் ரெகுநாதபுரம் நாகா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற கலாம் வேல்ட் ரெகார்ட்  300க்கும் மேற்பட்ட மூலிகைகளினால்  இயற்கையால் ஆன உணவு பண்டங்களை காட்சிப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது .
      
நிகழ்ச்சியில், புதுமடம் பூன் மழலையர் பள்ளியின் சார்பாக குழந்தைகள் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சியில், ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர்  ரெஜினி , தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அதிகாரி  ஜெயந்தி, பாரம்பரிய இயற்கை வேளாண் விஞ்ஞானி புதுக்கோட்டை நடேசன், சின்னையா, கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட் ஒருங்கிணைப்பாளர் குமாரவேல் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
       
மேலும்,நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பூன் மழலையர் துவக்க பள்ளியின் மாணவர் - மாணவியர்களுக்கு சான்றிதழும் பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.பள்ளி ஆசிரியை கோவர்தினி சிறப்பாக நேர்த்தியாக குழந்தைகளின் உணவுகளை பார்வைக்கு காட்சிப்படுத்தியிருந்தார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *