கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளருமான டாக்டர் செல்லக்குமார் கை சின்னத்தில் போட்டியிட்டுள்ளார், இதனையடுத்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி புதியபேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தினை சட்ட மன்ற உறுப்பினரும் பர்கூர் திமுக சட்ட மன்ற உறுப்பினருமன மதியழகன் கலந்துக் கொண்டு திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது தமிழகத்தில் சிறப்பான ஒரு ஆட்சி நடைபெற்று வருகிறது இந்த நல்லாட்சி வேண்டும் மலர்ந்திட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கடசியின் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளராக டாக்டர் செல்லக்குமார் கை சின்னத்தில் போட்டியிட்டுள்ளார். அவர் வெற்றிபெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றியை குவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அப்போது கூட்டணி கட்சி பொறுப்பாளர் கதிரவன், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், மாவட்ட துணைச் செயலாளர் திருமதி சாவித்திரி கடலரசு மூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு, பர்கூர் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் ஆடிட்டர் வடிவேல், முன்னாள் மாவட்ட தலைவர் காசிலிங்கம், திமுக நகர செயலாளர்கள் அஸ்லாம், வேல்மணி, மாவட்ட துணைச் செயலாளர் கோவிந்தசாமி, இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் விக்னேஷ்பாபு, நகர தலைவர் லலித் ஆண்டனி, முன்னாள் நகர தலைவர் முபாரக், தேமுதிக மாவட்ட செயலாளர் சின்ராஜ், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் நூர் முகமது, எஸ். டி. பி. கட்சி தலைவர் அஸ்கர் அலி, சேவாதள மாவட்ட தலைவர் தேவராஜ், மாவட்ட செயலாளர் ஹரி, ஊடகப் பிரிவு கமலகண்ணன் உள்ளிட்டமதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

செய்திகள் : மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed