மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் கழக வேட்பாளராக போட்டியிடும் சமயநல்லூர் டாக்டர் பாலமுருகன் அலங்காநல்லூர் பேரூராட்சி பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

துண்டு பிரசுரங்களை வழங்கி வாடிப்பட்டி ரோடு, அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள பகுதிகள் ஐயப்பன் கோவில் எதிரே உள்ள பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

வியாபாரிகள், சலவை தொழிலாளர்கள், ஆன்மிக பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள், நகை கடை அதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கு கழக வேட்பாளராக போட்டியிடும் மருத்துவர் பாலமுருகன் தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்களிக்க கோரி சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பொதுமக்கள் வாக்காளர்கள் தங்களின் மேலான ஆதரவை வழங்கி தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்களிக்க இருப்பதாக உறுதி கூறினர் தொடர்ந்து அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *