குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் சார்பாகவும், குவைத் தூதரகம் சார்பாகவும் நேற்று கிட்டத்தட்ட 24 உடல்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில், முக்கிய நிகழ்வாக குவைத் தூதரக அதிகாரி மிசஸ் பரிமிதா திருபாதி அவர்கள் தீவிர முயற்சியினாலும் குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் மற்றும் அலிபாய் அவர்களின் தீவிர முயற்சியில் இந்த 24 சடலங்களும் கொச்சின் வழியாக வந்து அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில், முக்கிய நிகழ்வாக தமிழகத்தை சார்ந்த இருவர் ஈரான் போரில் தாக்குதலில் காயம் அடைந்தனர். அதில் ஒருவர் மட்டும் தீர சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். அவர் பெயர் சந்தான செல்வம் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்தவர்.
அவரது சடலமும் தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் தூதரக அதிகாரி அவர்களின் தீவிர முயற்சி மற்றும் குவைத் தமிழ் மக்கள் சேவை மையத்தின் தலைவர் அலிபாய் அவர்களின் தீவிர முயற்சினாலும் அனைவரது உடல்களும் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் தாக்குதல் போரில் உயிரிழந்த அவரது குடும்பத்திற்கு அரசு உதவி வேண்டுமென்று அவர்கள் குடும்பத்தினர் சார்பாகவும், குவைத் தமிழ் சேவை மக்கள் சார்பாகவும், பத்திரிக்கை வாயிலாக கோரிக்கை வைக்கப்படுகிறது. குவைத் தூதரகமும் அந்த குடும்பத்திற்கு நிதி கிடைக்க தக்க முயற்சி எடுப்பதாக சொல்லி உள்ளார்கள். தமிழகத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777
