திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பொன்னேரி தனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொன்னேரி தனி தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ரவிச்சந்திரனிடம் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சந்தோஷ் குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அஇஅதிமுக சார்பில் சங்கர்,
அனைத்து இந்திய கிஷான் ஜனதா கட்சி சார்பில் மகாலிங்கம், நாம் தமிழர் கட்சியின் சார்பில் ராஜாத்தி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். பின்னர், மனு தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வருவாய் கோட்ட அலுவலக பெயர் பலகையில் வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது பொன்னேரி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வகுமார்,பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம்,தனி வட்டாட்சியர் வாசுதேவன்,தேர்தல் நடத்தும் துணை அலுவலர் மதன்குமார் வேட்பு பெறும் அலுவலர் சிவகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
எதிரொலி / 8939476777
