சமூக ஆர்வலர் ஆ.இசக்கிமுத்து தகவல்!


தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள அரியபுரம் கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான  ஸ்ரீ பச்சைப் பெருமாள் அய்யனார் திருக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. வேளார் சமுதாயத்தைச் சேர்ந்த 5 பங்காளிகள், குடும்பத்தினர்கள் ஆதி முதல் பூஜை காரியங்கள் செய்து வந்தனர்.

இக்கோவிலின் தலவிருட்சமாக மருதம் மரம் முன்பு இருந்தது. அது வயதாகி பட்டுபோன காரணத்தினால் தற்போது வில்வமரம் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் பரம்பரை அறங்காவலரும், பூசாரியுமான இ.ஆறுமுகவேளார், இரண்டு அரச மரக் கன்றுகளை அருகருகே ஊன்றினார். அது வளர்ந்து செடியானதும் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரே மரமாக, ஒரே தண்டாக வளர்ந்துள்ளது. வேரெங்கும் காணப்படாத இந்த அதிசய மரம் இத்திருக் கோவிலில் உள்ளது. அதை இன்றும் நாம் கோவிலில் காணலாம்.

அய்யனாரின் அவதார தினமான பங்குனி உத்திரத் திருநாளன்று அவர் தம் குல வழியில் பல சமூக மக்கள் ஆயிரக்கணக்கில் வழிபட்டுச் செல்கின்றனர். அதன்படி இன்று 1ஆம் தேதி புதன்கிழமை அரியபுரம் ஸ்ரீ பச்சைப் பெருமாள் அய்யனார் திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அருள்மிகு அய்யனாருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெறும். உபயதாரர்கள் மூலமாக பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

இக்கோவிலில் பச்சை விநாயகர், பாலமுருகன், பிரம்மசக்தி, பேச்சியம்மன், கொம்புமாடன், ஆலிமாட சுவாமி, கருப்பசாமி, குதிரை பட்டாணி சுவாமி, கருப்பண்ணசாமி, காளியம்மன், ராகு, கேது, துவாரபாலகர் மேலும் சில காவல் தெய்வங்கள் அய்யனாருக்கு துணை நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

இத்தகவலை தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம், அரியபுரம் சமூக ஆர்வலர் ஆ.இசக்கிமுத்து தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட செய்தியாளர்
செ.பா.தவசிக்கனி / எதிரொலி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed