திருநெல்வேலி மாவட்ட மீலாது கமிட்டி அமைப்பாளர் வி.எஸ்.டி. அமானுல்லாஹ் ஹல்லாஜியா ஏற்பாட்டின் பேரில் நெல்லை மாநகரம் மேலப்பாளையம் பஜார் திடலில் உத்தம திருநபி உதய தின விழா நடைபெற்றது.

காலையில் நடைபெற்ற இஸ்லாமிய புகைப்பட கண்காட்சி திறப்பு விழாவிற்கு பொறியாளர் எம்.கே. பஷீர் அஹமது பிலாலி தலைமை தாங்கினார். எஸ்.எம். ஹயாத் முகம்மது, வி.எஸ்.டி. சலீம் பாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஞானியார் அப்பா தர்கா பள்ளி வி.எஸ்.டி. அமீர் அம்சா ஹல்லாஜியா புகைப்பட கண்காட்சியைத் திறந்து வைத்தார்.

மாலை 4.30 மணி அளவில் மீலாதுநபி சமய நல்லிணக்க ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எஸ்.ஏ. காஜா முஹ்யித்தீன் பைஜி தலைமை தாங்கினார். திருநெல்வேலி மாவட்ட சிவில் இன்ஜினியர் அசோசியேஷன் தலைவர் பொறியாளர் பி.இமயவரம்பன், அகில இந்திய கட்டுனர் சங்கத் தலைவர் பொறியாளர் ஜி.முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் பொறியாளர் எல்.கே.எம்.ஏ. முகம்மது நவாப் ஷூஸைன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். மாலை 7 மணிக்கு மீலாது நபி கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பொறியாளர் ஏ.பி.எம். அப்துல் காதர் தலைமை தாங்கினார். காஜா முகைதீன் பிலாலி ஜிஸ்த்தியுல் காதிரி, சாஜிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் எஸ்.சப்ரின் முனீர், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இரவு 8 மணிக்கு மேலப்பாளையம் பஜார் திடலில் “உத்தம திருநபி உதய தின விழா சொற்பொழிவு” நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி மாவட்ட மீலாது கமிட்டி அமைப்பாளர் மேலப்பாளையம் வி.எஸ்.டி. அமானுல்லாஹ் ஹல்லாஜியா தலைமை தாங்கினார். மௌலவி எஸ்.எஸ். முகம்மது அலி உஸ்மானி முன்னிலை வகித்தார். எஸ்.ஏ. சலீம் பாதுஷா பிலாலி வாழ்த்துரை வழங்கினார். திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் ஜீலானியா பள்ளிவாசல் தலைமை இமாம் எஸ்.கே. அகம்மது மீரான் பிலாலி ஹழ்ரத், “பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ல்லம் அன்னவர்களின் மீது சஹாபாக்கள் கொண்ட பேரன்பு” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். முடிவில் டாக்டர் எஸ்.கே. ஷாஜகான் நன்றி கூறினார்.

செய்தியாளர் செ.பா.தவசிக்கனி
எதிரொலி / நெல்லை மாவட்டம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *