நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் (ஏப்ரல் 23) புதிய தமிழகம் கட்சியினர் தனித்து போட்டியிட்டு களம் காண்கின்றனர். இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி, 43 பேர் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார். அதன்படி டாக்டர் க.கிருஷ்ணசாமி, ஒட்டப்பிடாரம் தொகுதியிலும், அவரது மகனும், புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணித் தலைவருமான டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி, திருநெல்வேலி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் களம் காண்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு புதிய தமிழகம் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் என்.ஆர். சுதன் என்ற என்.ராஜ சுதன், வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் தென்திருப்பேரை அருகில் உள்ள குருகாட்டூர் ஆகும்.

ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்புப் படை வீரரான இவர் தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவரது தந்தை பெயர் நெல்லையப்பன். இவரது தாயார் பரிமளம் ஓய்வு பெற்ற தலைமையாசிரியை. இல்லத்தரசியான இவரது துணைவியார் பெயர் ஆர்.சுதா. தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த இவர் ‘வெற்றி நிச்சயம்’ என்ற துணிச்சலோடு தேர்தல் களம் காண்கிறார்.

நெல்லை மாவட்ட செய்தியாளர்
செ.பா.தவசிக்கனி / எதிரொலி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed