பத்து நாட்களாக வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தொலைபேசி மூலம் கூறியும் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சித் தலைவரை கழிவுநீர் கலந்த குடிநீருடன் நேரில் சந்திக்க போவதாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தலைவரின் கணவர் பேட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் முள்ளி பள்ளம் கிராமத்தில் தெற்கு தெருவில் குடிநீரில் கழிவு நீர் கலந்து கருப்பு நிறத்தில் வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பலர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்

இது குறித்து முள்ளிப்பள்ளம் ஊராட்சி செயலாளர் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரி ஆகியோரிடத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மார் நாட்டான் கூறுகையில் ;

காலையில் குடி தண்ணீர் குழாயை திறந்தவுடன் கருப்பு கலரில் தண்ணீர் வருகிறது மேலூர் நேரம் செல்ல செல்ல கழிவுநீர் கலந்து குடிநீரில் துர்நாற்றம் வீசுகிறது இதனால் குடிநீரை அருந்தும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் வயதானவர்களுக்கு வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்படுவதுடன் தீவிர தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது இதுகுறித்து முள்ளி பள்ளம் ஊராட்சி செயலாளர் காசிமாயன் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலர் பொற்செல்வி ஆகியோரிடம் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து பத்து நாட்களுக்கு மேல் ஆன நிலையில் இதுவரை சுத்தமான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை

தற்போது வரை 10 நாட்களுக்கும் மேலாக கருப்பு கலரில் தான் குடிநீர் வந்து கொண்டுள்ளது இதனால் குடிநீரை குடிப்பதற்கு பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர் ஆகையால் உடனடியாக வாடிப்பட்டி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் முள்ளிப்பள்ளம் ஊராட்சி அலுவலக பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுத்து சுத்தமான குடிநீரை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

இல்லையென்றால், குடிநீரை கேன்களில் எடுத்துக்கொண்டு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு கொடுக்க வேண்டிய நிலை வரும்,

சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் முள்ளி ப்பள்ளம் தெற்கு தெரு பகுதியில் கருப்பு கலரில் வரும் குடிநீரை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த பகுதி பொதுமக்கள் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி / 8949476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *