கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி ஒவ்வொரு அரசு துறை சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் நெல், பருத்தி கொட்டை, துவரை, பருப்பு உள்ளிட்ட பல்வேறு சிறுதானியங்களை பயன்படுத்தி தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் வரைந்து உள்ளனர்.

பொது மக்களிடையே 100 சதவிதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தி சிறுதானிய பயறு வகைகளைக் கொண்டு என் வாக்கு, என் உரிமை என்ற தலைப்பில் வரைந்துள்ளதை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அவர்கள் பார்வையிட்டு மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் 100 சதவிதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தி, சிறுதானியங்கள் கொண்டு போடப்பட்டுள்ளதைப் பாராட்டி வாக்காளர்களுக்கு
விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.

அப்போது மாவட்ட வேலாண்மை இணை இயக்குனர் காளிமுத்துக, மாவட்ட தோட்டக் கலைத்துறை இணை இயக்குனர் திருமதி இந்திரா, வேளாண்மை இணை இயக்குனர் ஏஞ்சலின் பொன் ராணி, திருமதி கலா உள்ளிட்ட தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *