இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் கிறித்தவர்கள் ஆண்டு தோறும் குருத்தோலை பவனி அனுசரிக்கின்றனர். இயேசுவின் பாடுகளின் குருத்து ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது.

இதனையொட்டி கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பம் அருகே உள்ள மிகவும் பழமை வாய்ந்த புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இன்று குருத்தோலை பவனி நடைபெற்றது,
பங்குத் தந்தை நாயகம் தலைமையில் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத் தோலை ஏந்தி கொண்டு முக்கிய வீதிகளில் பவனியாக சென்று மீண்டும் ஆலயத்துக்கு வந்தனர் இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர் இதேபோன்று பண்ருட்டி உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது..

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed