ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பாரதிநகர், சந்தைப்பேட்டை, தீயணைப்பு நிலைய பகுதி, வேந்தோணி சாலை, முகமது அலி தெரு, ஓட்டப் பாலம், காட்டு பரமக்குடி, வைகை நகர், மஞ்சள் பட்டணம், ஆற்றுப் பாலம் பகுதி, முத்தாலம்மன் கோவில் பகுதி, எமனேஸ்வரம் உள்பட நகரில் 70 – க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் , அனைத்து விநாயகர் சிலைகளும் தீயணைப்பு பகுதிக்கு கொண்டு வரப்பட்டு 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர்கள் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பெருமாள் கோவில் படித்துறை வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது.
உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட நிலையில் பரமக்குடி நகரில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இந்து முன்னணி அமைப்பினர் , இளைஞர் சங்கங்கள் சார்பாக 70க்கும் மேற்பட்ட இடங்களில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் டாட்டா ஏசி வாகனத்தில் மேள தாளங்களும் வாணவேடிக்கைகளும் முழங்க இளைஞர்களின் ஆட்டம் பாட்டத்துடன் 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புடன் வைகை ஆற்றில் பிரத்தேகமாக தோண்டப்பட்ட குழியில் தண்ணீர் நிரப்பப்பட்டு கிரேன் உதவி கொண்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.

விநாயகர் சிலை ஊர்வலத்தை நகரில் சாலையின் இரு புறமும் திரண்டு இருந்த பெண்கள், குழந்தைகள், ஆண்கள் உள்பட பொதுமக்கள் பக்தியுடன் கண்டுகளித்தனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed