கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என பரபரப்பு குற்றச்சாட்டு…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர் சேரி பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக குடிநீர் குழாய் சேதமடைந்து சரி சரிசெய்யப்படாததால், குடிதண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும், மேலும், தங்கள் பகுதிக்கு மின்கம்பங்கள் மற்றும் லைட் உள்ளிட்டவைகள் ஏற்படுத்தியும் மின்சாரம் தர மறுப்பதாகவும் முறையாக சாலை வசதியும் ஏற்படுத்தி தரவில்லை எனவும், அலங்காநல்லூர் யூனியன் அலுவலர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அலங்காநல்லூர் போலீசார் சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதற்கு உடன்படாத பொதுமக்கள் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த அரசு பேருந்தை மறித்து தொடர் மறியலில் ஈடுபட்டனர்.

தங்கள் பகுதிக்கு நல்ல தண்ணீர் கிடைத்து பல வருடங்கள் ஆகிவிட்டதாகவும், மின்சாரம் இல்லாமல் இரவு முழுவதும் சிரமப்படுவதாகவும், தேர்வு நடைபெறும் சமயத்தில் கூட அதிகாரிகள் மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும்,

இதுகுறித்து 40-க்கும் மேற்பட்ட முறை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கும் அலங்காநல்லூர் ஒன்றிய அலுவலகத்திற்கும் மனு அளித்தும் நேரில் சென்றும் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கூட மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு பத்துக்கும் மேற்பட்டோர் சென்று குடிதண்ணீர் மின்சார வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்திருந்தோம்.

ஆனால், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் வேறு வழி இன்றி உடனடியாக குடிநீர் மின்சாரம் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர கோரி மறியலில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஒரு ஆண்டுக்கு முன்பு குடிநீர் வழங்கக்கூடிய மோட்டார் பழுதடைந்த நிலையில் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் பழுதடைந்த மோட்டாரை சரி செய்ய நடவடிக்கை எடுக்காததால் தற்போது வரை குடிதண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுவதாக கூறுகின்றனர்

மூன்று மாதங்களுக்கு முன்பு ஐந்து வீடுகள் உள்ள பகுதிக்கு உடனடியாக மின்சாரம் குடிநீரை வழங்கிய ஊராட்சி நிர்வாகம் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்ய மறுப்பது என்ன நியாயம்? பணம் கொடுத்தால்தான் குடிதண்ணீர் மின்சாரம் கிடைக்குமா?

ஆகையால், உடனடியாக எங்கள் பகுதிக்கு குடிதண்ணீர் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சாலை வசதிகள் உள்ளிட்டவற்றை செய்து தர வேண்டும் இல்லையென்றால் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்பது குறித்து பகுதி மக்களுடன் கலந்து பேசி விரைவில் முடிவு எடுப்பதாக கூறினார்கள்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி. / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed