மதுரை மாவட்டம் சோழவந்தானில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்றதுமான அருள்மிகு ஜெனக நாராயண பெருமாள் திருக்கோவில் பிரமோற்சவ விழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம், அதேபோல் இந்த ஆண்டு சிறப்பு வாய்ந்ததாக 50 ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
அதை தொடர்ந்து, 24 ம் தேதி செவ்வாய்க்கிழமை பட்டு பல்லக்கு நிகழ்ச்சியும் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் 25ம் தேதியும் அதனைத் தொடர்ந்து 27 ஆம் தேதி இராம நவமி விழாவும் 28ம் தேதி புஷ்ப யாகம் நடைபெற்று 29ம் தேதி நிறைவு நிகழ்ச்சியான விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு வருடமும், நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழாவில் சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் பெருமாளை வழிபட்டுச் செல்வார்கள் ஏற்பாடுகளை செயல் அலுவலர் தாரணி முரளிதரன் உள்ளிட்ட பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

செய்திகள் : காளமேகம் / மதுரை எதிரொலி / 8939476777
