ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர் மக்களின் காவல் தெய்வமான ஸ்ரீ முத்தால பரமேஸ்வரியம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனித் திருவிழா 12 நாட்கள் சீரும்,  சிறப்புமாக, நடைபெறுவது வழக்கம்.
  
பங்குனித் திருவிழாவிற்கு முன்னதாக பூச்சொரிதல் விழா வெகு விமர்சையாக நடைபெறும்.

அதனையொட்டி , பரமக்குடி நகர் முழுவதும் ஆங்காங்கே மேடை அமைத்து முத்தாலம்மன் வித … விதமான … கோலத்தில் வீற்றிருப்பதோடு பல தட்டுகளில் பல்வேறு விதமான பூக்களுடன் காட்சி தருவார்.

இந்நிலையில், பரமக்குடி சென்குப்தா தெரு சன் குரூப்ஸ் நண்பர்கள் தங்களது தெருவில் வழக்கமாக பூச்சொரிதல் விழாவை கோலாகலமாக கொண்டாடுவார்கள்.
அதனடிப்படையில், இந்த ஆண்டு விகேபி கண்ணன் – லெட்சுமி இல்லத்தில் நன்கு அலங்கரிக்கப்பட்ட முத்தாலம்மன், பூத்தட்டுகள் காட்சி தந்ததை தெரு – நகர் மக்கள், தேவகோட்டை உள்பட வெளியூர் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, பூத்தட்டுகள் ஊர்வலமாக முத்தாலம்மன் கோவில் உள்பட நகர் முழுவதும் வலம் வந்து சன் குரூப்ஸ் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த மேடையில் முத்தாலம்மன், பூத்தட்டுகள் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed