சேலம் ராமகிருஷ்ணா பூங்கா அருகில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக கார்ல் மார்க்ஸ் சிலை வளாகத்தில், காரல் மார்க்சின் 143 வது நினைவு தின நிகழ்ச்சி உயிர்மெய்த் தமிழ்ச்சங்கம், உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் சார்பில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பணிநிறைவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவசுப்ரமணியன் தலைமை வகித்தார். அமைப்பின் மாநில தலைவர் சேலத்து பாரதி சொல்லரசர் காரல்மார்க்சின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார். காரல்மார்க்சின் வாழ்வியல் தியாக வரலாற்றை மார்க்சிய அம்பேத்கரிய பெரியாரிய சிந்தனையாளர் காளி.தங்கதுரை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில், எஸ்.ராமச்சந்திரன், கே.பெருமாள், பன்முகக் கலைஞர் ரா.சு.யுவராசு, தமிழ் திசை ஆர்.பூபாலன், யூனிஃபை அகாடமி இயக்குனர் விக்னேஷ், கவிஞர் வாலறிவன், சு.பழனிவேலு, மனம் அ.மோகன், கோவை சுந்தரம், பி.மாணிக்கம், எம்.ஜெயவேல் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டு காரல்மார்க்சின் புகழ் ஓங்குக, பொதுவுடைமை சித்தாந்தம் வளர்க என முழக்கமிட்டனர். பின்னர் அனைவரும் காரல் மார்க்சின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி இரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
சேலம் செய்தியாளர்
கா.தங்கதுரை 9442979467 / எதிரொலி / 8939476777
