ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றதையொட்டி, 
       
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ராமநாதபுரம் நகராட்சி பெண்காள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இத்தேர்வுக்காக " ராமநாதபுரம் மாவட்டத்தில் 8,183 மாணவர்களும், 8,588 மாணவியர்களும், தனித்தேர்வாளர்களாக 571 மாணவர் - மாணவியர்களும் 17,342 மாணவர் - மாணவியர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். 

இதில், 17,066 நபர்கள் தேர்வில் பங்கேற்றனர்.
இதில் 261 பள்ளிகளை சேர்ந்த மாணவர், மாணவிகள் 85 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். மேல்நிலை பொதுத்தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளர்களாக 85 தலைமை ஆசியர்களும், துறை அலுவலர்/ கூடுதல் துறை அலுவலர்களாக 85 ஆசிரியர்களும், அறைக் கண்காணிப்பாளர்களாக பணியாற்ற 1033 ஆசிரியர்களும் பணி மேற்கொள்வார்கள்.

கண்காணிப்பு அலுவலரான இணை இயக்குநர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் , கல்வி அலுவலர்கள் தலைமையிலும் தனித்தனியாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 85 தேர்வு மையங்களிலும் 105 நிலைத்த நிற்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கண் பார்வையற்ற, காது கேளாத, உடல் உறுப்புகளில் மாற்றுத் திறார் கொண்ட மாணாக்கர்கள் சிரமமின்றி தேர்வு எழுதும் வகையில் சொல்வதை எழுதுபவர்கள் 117 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களும் தேர்வெழுதும் நேரத்தில் கூடுதலாக 7 மணி நேரம், மொழிப்பாட விலக்கு போன்ற சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளதுடன் ஒவ்வொரு மையத்திற்கும் காவல்துறையின் உரிய பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர் - மாணவியர்கள் எவ்வித அச்சமின்றி தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

ஆய்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்.ரெஜினி , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட கல்வித்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed