மதுரை மாநகரில் குட்ஷெட் தெருவில் செயல்படும் ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை சார்பில் கண் நீர் அழுத்த நோய் வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு
மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் எல்.அருள் சுந்தரேஷ்குமார், மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் ஆர். செல்வராஜ், கண் மருத்துவர் சீனிவாசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, கண்ணதாசன் நற்பணி மன்ற தலைவர் சொக்கலிங்கம் மற்றும் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து பட்டிமன்ற ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்த பேரணியில் கண் நீர் அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மொபைல் பார்க்கும் நேரம் அதிகமாகி விட்டதால் இது போன்ற விழிப்புணர்வு அவசியம் என்று கூறினார். இந்த பேரணியில் அனைத்து மருத்துவ பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்திகள் / லோகநாதன் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *