திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் இன்று மாலை 5 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளித்து கொண்டு இருந்திருக்கிறார்கள். அதில், ஒரு மாணவன் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதனால் அந்த மாணவன் ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டு அதிலிருந்து மீண்டு வருவதற்கு அந்த இளைஞர் எவ்வளோ முயற்சி செய்து போராடி உள்ளார். ஆனால், அதிலிருந்து அவர் தப்பி வர முடியவில்லை என்பதை உணர்ந்த அந்த மாணவருடன் வந்திருந்த மற்ற சக மாணவர்கள் அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அருகில் இருந்தவர்களை அழைத்து கூச்சல் போட்டுள்ளனர்.

இந் நிலையில், இந்த தகவலறிந்த திருப்பரங்குன்றம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழு வீரர்கள் விரைந்து சென்று சரவண பொய்கையில் 2 மணி நேரத்திற்கு மேலாக மாணவரை தேடுதல் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் வெகு நேரத் தேர்தலுக்குப் பிறகு மாணவர் நீரில் மூழ்கி இறந்து போன நிலையில் அவருடைய உடலை தீயணை படுகிறார்கள் மீட்டனர்.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இறந்து போன மாணவர், மதுரை அழகப்பாநகர் முத்துப்பட்டி பாண்டியன் நகரை சேர்ந்த பாலா சந்துரு (வயது 17) என்று தெரியவந்தது. மேலும், இவர் மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் மதுரா கல்லூரியில் படித்து வந்த நிலையில், இன்று மாலை தனது நண்பர்களுடன் இங்கு குளிக்க வந்த போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனது தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த திருப்பரங்குன்றம் போலீசார் மேலும், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள் : காளமேகம் / மதுரை / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed