ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வ. சங்கரநாராயணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
   
கூட்டத்தில் , ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வ. சங்கரநாராயணன் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 430 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
    
கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும், தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்கனிடம் அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.
மேலும் , பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து , மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 04 பயனாளிகளுக்கு தலா 08 கிராம் தங்கம் வீதம் 32 கிராம் தங்க நாணயங்களை மாவட்ட வருவாய் அலுவலர் வ. சங்கரநாராயணன் வழங்கினார்.

கூட்டத்தில், மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட பொது தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி ,
ஆதி திராவிடர் , பழங்குடியினர் நல அலுவலர் செல்வி , மாற்றுத் திறனாளிகள் மாவட்ட நல அலுவலர் சந்திரன், செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட பொதுமக்கள் , பயனாளிகள் , அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed