பண்ருட்டியில் போலீசார் வாகன சோதனையின் போது காரில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ போதை பொருள் மற்றும் கார் பறிமுதல் மேலும் கடத்தலில் ஈடுபட்ட இருவர் தப்பி ஓட்டம், ஒருவர் கைது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை…

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவு பேரில் பண்ருட்டி டிஎஸ்பி ராஜா தலைமையிலான காவல் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் பண்ருட்டி டு சென்னை சாலையில் தீவிர வாகன சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

அப்போது, 3 பேர் பயணித்து வந்த கார் ஒன்றை மடக்கி சோதனை செய்ய முற்பட்டபோது ராஜஸ்தான் மாநிலத்தில் சேர்ந்த டிரைவர் மற்றொருவர் தப்பி ஓடிய நிலையில், ஒருவரை மடக்கிப்பிடித்த போலீசார் காரை சோதனை செய்தபோது மூட்டை மூட்டையாக குட்கா போதை பொருள் காரில் பதுக்கி கடத்தி வந்தது தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து, ரூபாராம் என்பவரை காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் அவரிடம் தீவிர விசாரணை செய்தனர். இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் பண்ருட்டி காவல் நிலையத்துக்கு நேரில் வந்தவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது ;
பண்ருட்டி பாரதி நகர் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்ட போது காரில் மூன்று பேர் கொண்ட கும்பல் பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு குட்கா போதை பொருள் விற்பனைக்காக காரில் கடத்தி வந்ததாக தெரிவித்தனர். அதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் லீலாராம் மற்றும் கடலூரைச் சேர்ந்த தினேஷ் ஆகியோர் தப்பி ஓடிய நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மற்றொருவரான ரூபாராம் என்பவரை மடக்கி பிடித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தியதில் கடத்தலில் ஈடுபட்ட ஓட்டுனர் லீலாராம் தினேஷ் இருவரையும் தேடி வருவதாகவும் ரூபாராம் என்ற
நபரை கைது செய்தனர்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தும் இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed