கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி தண்ணீர் பள்ளம் கிராமம், துரை மார்டன் பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி கம்பன் கழகம் இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் விழாவுக்கு கிருஷ்ணகிரி கம்பன் கழக பொருளாளர் மு.ஸ்ரீரங்கன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

அதில், கிருஷ்ணகிரி கம்பன் கழக தலைவர் மற்றும் துரை மார்டன் பள்ளி முதல்வர் மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர் தலைமை தாங்கினார். அதில் பள்ளி நிறுவனர் ஜெ .து .மணி அவர்கள் பெண்களின் சிறப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

விருந்தினராக பள்ளித் தாளாளர் மு.சத்தியமூர்த்தி மற்றும் பள்ளி நிர்வாக இயக்குனர் அ. சிந்து அவர்கள் கலந்துகொண்டு மகளிர்களின் சிறப்புகளை பற்றி ஆசிரிய பெருமக்களுக்கு விளக்கினார். மற்றும் அங்குள்ள ஆசிரியர்களுக்கு கிருஷ்ணகிரி கம்பன் கழகம் சார்பாக வழங்கிய வைர மங்கை விருதை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். விழா முடிவில் ஆசிரியர் மர்ஜியா நன்றி உரை நிகழ்த்தினார்.

செய்திகள் : மாருதி – மனோ / கிருஷ்ணகிரி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed